Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை
Editorial / 2020 டிசெம்பர் 21 , பி.ப. 09:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
நூருல் ஹுதா உமர்
கொவிட்-19 நோயாளர்களின் கழிவுகளுக்கு எதிராக, அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றத்தில் வழக்கொன்று, இன்று (21) தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பாலமுனையில், கொவிட்-19 நோயாளர்களுக்குச் சிகிச்சையளிக்கும் வைத்தியசாலையில் இருந்து, வெளியேற்றப்படும் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் கழிவுகளால், நிலக்கீழ் நீர் மாசடைகிறது. அதனால், தங்களுடைய பிரதேசத்தில் கொரோனா வைரஸ் தொற்றுப்பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஆகையால். அதற்குத் தடையுத்தரவைப் பிறப்பிக்குமாறு அம்மனுவில் கோரப்பட்டுள்ளது.
மனுவில், பாலமுனை வைத்தியசாலையில் பணிப்பாளர், கல்முனை சுகாதார சேவைகள் பணிப்பாளர், அட்டாளைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி, கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆகியோர் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
மனுவை ஆராய்ந்த நீதவான், பிரதிவாதிகளை எதிர்வரும் ஜனவரி 04 ஆம் திகதி ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்குமாறு கட்டளை பிறப்பித்துள்ளார்.
பாலமுனை மக்கள் சார்பில், இந்த மனுவைச் சட்டத்தரணி எம்.ஏ. அன்ஸில், ஏ.ஏல். அலியார், எஸ். ஆபிதீன். ஏ.எல். ஹஸ்மீர், பி.எம். ஹுஸைர் ஆகிய ஐவரும் தாக்கல் செய்துள்ளனர்.
இவ்வழக்கில் பாலமுனை மக்கள் சார்பில், குரல்கள் இயக்கத்தின் (Voice Movement) சட்டத்தரணிகளான சிரேஸ்ட சட்டத்தரணி எம்.எம். பஹீஜ், எம்.எம். றத்தீப் அஹமட், யு.எல்.வஸீம் ஆகியோர், நியாயத்தை முன்வைத்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
52 minute ago
3 hours ago