2025 ஏப்ரல் 08, செவ்வாய்க்கிழமை

கொரோனா கொத்தணிகள் எதுவும் உருவாகவில்லை

Freelancer   / 2021 டிசெம்பர் 10 , மு.ப. 07:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாடசாலைகளில் கொரோனா கொத்தணிகள் எதுவும் உருவாகவில்லையென சுகாதார சேவைகள் பிரதிப்பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

நாட்டில் உள்ள சுமார் நான்கு மில்லியன் பாடசாலை மாணவர்களில் சுமார் 400 முதல் 500 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

வீட்டுச் சூழலிலிருந்து ஏராளமான மக்கள் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். 

பாடசாலை மாணவ, மாணவியர் மத்தியில் கொரோனா தொற்று வேகமாக பரவுவதில்லை. 

பாடசாலைகளில் சுகாதார வழிகாட்டல்களை முறையாகப் பின்பற்றினால் கொத்தணிகள் உருவாக வாய்ப்பில்லை என்றும் அவர் கூறினார். 

இதற்கிடையில், பாடசாலைகளில் கொரோனா சுகாதார வழிகாட்டல்கள் முறையாக அமல்படுத்தப்படவில்லையென்று ஆசிரியர் சங்கங்கள் குற்றம்சாட்டியுள்ளன.

மேலும், பாடசாலைகளில் கொத்தணிகள் உருவாகலாம் என்றும், மீண்டும் பாடசாலைகளை மூட வேண்டிய நிலை ஏற்படும் என்றும் பொதுச் சுகாதார அதிகாரிகள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X