2024 நவம்பர் 22, வெள்ளிக்கிழமை

காலிமுகத்திடலில் குழப்பமான நிலை

Freelancer   / 2022 ஏப்ரல் 16 , மு.ப. 11:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசாங்கத்திற்கு எதிராக இளைஞர்கள் முன்னெடுத்துள்ள காலி முகத்திடல் போராட்ட இடத்தில் திடீரென பொலிஸ் ட்ரக் வண்டிகள் குவிக்கப்பட்டுள்ளன.

காலி முகத்திடலில் பொலிஸ் ட்ரக் வண்டிகள் எதற்காக நிறுத்தப்பட்டுள்ளன என்பது தொடர்பில் இதுவரை எந்த தகவலும் இல்லை. இதனால் அப்பகுதியில் போராட்டக்காரர்களிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது.

எனினும், ஆர்ப்பாட்டங்களை சீர்குலைக்கும் எந்தவொரு முயற்சியும் நாட்டிற்கு பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

“இந்த நாட்டு மக்களின் அமைதியான போராட்டத்தை எந்த வகையிலும் சீர்குலைக்கும் எந்த முயற்சியை இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் மிகுந்த கவலையுடன் பார்க்கிறது. அத்தகைய முயற்சியானது நாடு, அதன் ஜனநாயகம், அதன் பொருளாதாரம் மற்றும் சட்டத்தின் ஆட்சி ஆகியவற்றிற்கு கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும், ” என்று அவர்களின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. (R)

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X