2024 நவம்பர் 22, வெள்ளிக்கிழமை

காசா மருத்துவமனை மீது குண்டுவீச்சு; 500 பேர் உயிரிழப்பு

Freelancer   / 2023 ஒக்டோபர் 18 , மு.ப. 08:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

காசாவில் உள்ள மருத்துவமனை மீது ஏவுகணை மூலம் குண்டுகள் வீசப்பட்டடிருக்கிறது. இந்த கொடூர சம்பவத்தில் 500 பேர் பலியாகி உள்ளனர். 

இந்நிலையில் மருத்துவமனை மீது ஏவுகணை வீசிவிட்டதாக இஸ்ரேல் மீது ஹமாஸ் இயக்கம் குற்றம்சாட்டியுள்ளது. 

இதேபோல் பாலஸ்தீனத்தின் ஏவுகணை தான் தவறுதலாக விழுந்திருக்கும் என்று இஸ்ரேலும் பரஸ்பரம் குற்றம்சாட்டி உள்ளது.

இஸ்ரேல் ராணுவம் - பாலஸ்தீனத்தின் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு இடையில் கடந்த அக்டோபர் 7 ம் திகதி போர் தொடங்கியது. சுமார் 11 நாட்களை கடந்தும் போர் தீவிரமாக நீடித்து வருகிறது. 

பாலஸ்தீனத்தின் காசாவில் உள்ள கான் யூனிஸ், ரஃபா உள்ள பல்வேறு பகுதிகளை குறிவைத்து இஸ்ரேல் போர் விமானங்கள் மூலம் குண்டுகளை வீசி வருகிறது.

பதிலுக்கு ஹமாஸ் இயக்கத்தினரும் குண்டுகளை வீசி வருகின்றனர். இஸ்ரேலில் இருந்து ஏராளமான ஏவுகணை குண்டுகள் வீசப்பட்டதால் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் கட்டிட இடிபாடுகளில் சிக்கியுள்ளனர். 

பலரையும் மீட்க முடியாத நிலை நீடிக்கிறது. இந்த சூழலில்மிக கொடூரமாக காஸாவில் உள்ள காசாவில் உள்ள அல் அஹ்லி அரபு மருத்துவமனையில் நடந்த பயங்கர குண்டுவெடிப்பில் சுமார் 500க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். ஏராளமான மக்கள் படுகாயம் அடைந்துள்ளனர். மருத்துவமனை முழுவதும் மரண ஓலம் காணப்படுகிறது. R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X