2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

. ’கறுப்பு ஞாயிறு நியாயமானது’

Editorial   / 2021 மார்ச் 09 , மு.ப. 05:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

கத்தோலிக்கர்களின் 'கறுப்பு ஞாயிறு' நியாயமானதெனத் தெரிவித்த அமைச்சர் விமல் வீரவன்ச, கடந்த அரசாங்கத்தில் இஸ்லாமிய தீவிரவாதிகள் தற்கொலைக் குண்டுதாக்குதலை நடத்துவதற்கு இடமளித்து பார்த்துக் கொண்டிருந்தனர். அதனால்தான் 'கறுப்பு ஞாயிறு' நினைவுக்கூரும் நிலை ஏற்பட்டுள்ளது என்றார்.

கொழும்பில் நேற்று (8) நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து கருத்துரைத்த அவர், 'தமக்கு ஏற்பட்ட அநீதிக்குப் பொறுப்புக் கூற வேண்டிய தரப்பினருக்குத்  தண்டனை கிடைக்க வேண்டுமென அவர்கள் எதிர்பார்க்கின்றனர். இது, அந்தக் குற்றவாளிகளுக்குப் புரியும் அளவுக்கு, நீதி நிலைநாட்டப்பட வேண்டுமென்றே நாமும் கூறுகிறோம்' என்றார். 

அதற்கான  நீதி நிலைநாட்டப்பட்டு வருகின்றது. அது முழுமையாக நிறைவு பெறவில்லை. எனவேதான், அதை விரைவாகவும் முழுமையாகவும் நிறைவேற்றுமாறு கத்தோலிக்கர்கள் வலியுறுத்துகின்றனர் எனத் தெரிவித்த அவர், கத்தோலிக்கர்களின் இந்த உணர்வு நியாயமானது. எனவே, அரசாங்கம் என்ற ரீதியில், இது தொடர்பான விசாரணையை உரிய முறையில் முன்னெடுக்க வேண்டும். இந்த விசாரணையை உரிய முறையில் செய்ய விடாமல், கால்களை இழுக்கும் செயற்பாடுகளை எவராவது அரசாங்கத்துக்கு உள்ளேயோ வெளியேயோ இருந்து முன்னெடுப்பார்களாயின், அவற்றைத்  தோற்கடித்து, கத்தோலிக்கர்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுப்பது அவசியமாகும் என்றார்.

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு மீது, இதன் முழுப் பொறுப்பையும் சுமத்த முடியாது. ஆணைக்குழு மூலம், சகல விடயங்களும் வெளிப்படும் என்றும் எதிர்பார்க்க முடியாது. அதற்காகத்தான் இந்த நாட்டில் இரகசியப் பொலிஸார் உள்ளனர். இரகசியப் பொலிஸார், விசாரணை ஆணைக்குழு போன்றவற்றின் பொறுப்புகள் வெவ்வேறானவை என்றார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .