2025 ஏப்ரல் 11, வெள்ளிக்கிழமை

குருநாகல் கேஸ் நிரப்பும் நிலையத்தில் தீ : நால்வர் உயிரிழப்பு

Editorial   / 2025 ஏப்ரல் 08 , மு.ப. 06:09 - 0     - 148

குருநாகல், வெஹராவில் உள்ள கேஸ் நிரப்பும் நிலையம் ஒன்றில் நேற்று இரவு (7) கேஸ் சிலிண்டர் வெடித்ததால் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், நான்கு பேர் காயமடைந்து, குருநாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குருநாகல் மாநகர சபையின் தீயணைப்புத் துறை தற்போது தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

தீ விபத்துக்கான காரணம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. R

சடலங்கள் இனம் காண முடியாத அளவிற்கு உள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X