2024 டிசெம்பர் 03, செவ்வாய்க்கிழமை

ஒரு மில்லியன் டொலருடன் கிளிநொச்சியில் மூவர் கைது

Editorial   / 2024 ஜூன் 14 , பி.ப. 12:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மு.தமிழ்ச்செல்வன்

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏ- 9 வீதி கந்தசுவமி கோவிலுக்கு
முன்பாக  ஒரு மில்லியன் அமெரிக்க டொலருடன்  மூன்று  பேரை
பொலிஸார் வியாழக்கிழமை (13) இரவு  கைது செய்துள்ளனர்.

ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் நாணயத்தாள் மற்றும் அதனை இலங்கை ரூபாவாக மாற்றுவதற்கான  ஆவணங்கள் என்பன பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.

 கிளிநொச்சி இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து அன்றிரவு 8 மணியளவில் உந்துருளியில் பயணித்த இருவரை கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்திற்கு முன்பாக வைத்து பொலிஸார் சோதனையிட்ட போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த  அமெரிக்க நாணயத்தாளை இலங்கை ரூபாவாக மாற்றுவதற்கான முயற்சியில் ஈடுப்பட்டிருந்த போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .