Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை
Editorial / 2021 ஜனவரி 11 , மு.ப. 07:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹரின் கடிதம்: ‘இரு முகங்கள்’ குறித்தும் விளக்கம்
தான் விரும்பியதைத் தெரிவிப்பது, தனது அடிப்படை உரிமையாகும். அதற்காக, ஒரு பயங்கரவாதியைப் போல் கொல்லப்படுவேன். எனினும், பயமின்றிக் கருத்துகளை முன்வைக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்ணான்டோ, ‘தன்னை ஒரு நாயைப் போல கொல்ல முடியும்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
‘ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவால், அம்பாறையில் வைத்து ஆற்றப்பட்ட உரை, தனக்கு விடுக்கப்பட்ட மரண அச்சுறுத்தலாகும். இதுவரையில் எவருமே என்னை அச்சுறுத்தவில்லை. ஆகையால், என்னுடைய உயிருக்கு, ஏதாவது அச்சுறுத்தல் ஏற்படுமாயின், அதற்கு ஜனாதிபதியே பொறுப்பேற்க வேண்டும்’ எனக் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ள ஹரீன், ‘இரு முகங்கள்’ குறித்தும் விளக்கமளித்துள்ளார்.
இவ்வாறு எழுத்தப்பட்ட முறைப்பாட்டு கடிதம், பொலிஸ் மா, சட்டமா அதிபருக்கும் இலங்கையிலுள்ள சகல தூதரகங்கள், உயர்ஸ்தானிகராலயங்கள் ஆகியவற்றுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
அந்தக் கடிதத்தில்,
‘அம்பாறையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட நந்தசேன கோட்டாபய ராஜபக்ஷ, ஆற்றிய உரையின் காணொளியை நான் பார்த்தேன். அதில், எனது பெயரைப் குறிப்பிட்டு, நான் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையைச் சுட்டிக்காட்டியுள்ளார். ஜனாதிபதி அவரது உரையில், அவரது முதற்பெயரான நந்தசேன என, நான் சுட்டிக்காட்டியதாகவும் தனக்கு இரண்டு முகங்கள் இருப்பதாகவும் அதிலொன்று அமைதியான பக்கமென்றும் மற்றொன்று இருண்ட பக்கமென்றும் கூறியிருந்தார்.
‘ஜனாதிபதியின் உரையின் பிரகாரம், தேசத்துரோகி, இனப்படுகொலை செய்தோர் ஆகியோருக்கும், அடிப்படை உரிமையை அமுல்படுத்தும் அரசியலமைப்பின் மக்கள் பிரதிநிதிகளுக்கு பாராளுமன்றத்தில் இருக்கும் பேச்சுக்கான சுதந்திரத்துக்கும் இடையிலான வேறுபாட்டை அறிந்துக்கொள்ள ஜனாதிபதி தவறிவிட்டார் எனக் குறிப்பிட்டுள்ளார்.
தீவிரவாதிகளுடன் எப்போதும் தான் தொடர்பு வைத்துக்கொள்ளவில்லை என்பதை நினைவுபடுத்திய ஹரீன், தமிழ் மக்கள் வாக்களிப்பதைத் தடுப்பதற்காக, எந்தவொரு தீவிரவாதிக்கும் இலஞ்சம் கொடுக்கவில்லை. இதுவரை வாழ்ந்த எந்தவொரு மனிதரையும் விட, பொலிஸ் அதிகாரிகளைக் கொன்ற, கருணாவைக் கட்டியணைக்கவில்லை. அனைத்துக்கும் மேலாக, எப்போதும் தான் இலங்கைப் பிரஜையே அன்றி, வேறு நாட்டு பிரஜை இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.
அவருக்கு விருப்பமில்லாத விடயங்களைத் தொடர்ந்து பேசினால், 'என்னை ஒரு நாயைப் போல கொல்ல முடியும்' என ஜனாதிபதி தெளிவாகக் தனதுரையில் குறிப்பிட்டுள்ளார்.
‘அவர், தனது கடமைகளில் தொடர்ந்து தோல்வியைச் சந்திக்கும் வரை, எனது வாழ்க்கைக்கு எவ்வித அச்சுறுத்தல் ஏற்பட்டாலும் அவர் விரும்பாவிட்டாலும் உண்மையை தொடர்ந்து சொல்வதன் மூலம் எனது கடமையையும் பொறுப்பையும் நிறைவேற்றுவேன்’ என அக்கடித்தில் ஹரீன் குறிப்பிட்டுள்ளார்.
பாதுகாப்புப் பிரிவுகளின் பிரதானி மற்றும் பாதுகாப்பு அமைச்சரான ஜனாதிபதி நந்தசேன கோட்டாபய ராஜபக்ஷவால் விடுக்கப்பட்டுள்ள அச்சுறுத்தலைக் கவனத்தில் எடுத்து, அவரால் தனக்குப் பாதிப்புகள் ஏற்படும் என்பதைச் சந்தேகிப்பதற்கு வேறு காரணங்கள் இல்லை. அது உண்மை. நான் அவரது முதற்பெயரைக் குறிப்பிட்டதும் ஜனாபதி இவ்வளவு பதற்றமடைந்ததை எண்ணி வியப்படைகிறேன் எனத் தெரிவித்துள்ளார். .
ஜனாதிபதிகளின் நீண்ட பெயர்களை, ஆரம்ப காலகட்டங்களிலிருந்து சுருக்கமாகத்தான் அழைப்பார்கள். உதாரணமாக, ஜே.ஆர்., பிரேமதாஸ, டீ.பி, மஹிந்த, சிறிசேன என அழைத்ததுண்டு. அவ்வாறு அழைத்த யாருக்கும் அச்சுறுத்தல் விடுக்கப்படவில்லை. எனினும், மஹா சங்கத்தினர், அவரை வன்முறையில் ஈடுபடுமாறு, உண்மையில் அறிவுரை வழங்கியுள்ளனரா என நம்புவது கடினமானது. கத்தோலிக்கனான எனது எண்ணத்தின் படி, பௌத்தம் வன்முறைக்குப் பதிலாக, அஹிம்சையை நிலைநிறுத்த அர்ப்பணிக்கப்பட்ட மதமாகும்.
பாதுகாப்பு செயலாளராக, தற்போதைய ஜனாதிபதி பதவி வகித்த போது, அவரை விமர்சித்த பல செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் காணாமல் போனதுடன் கொல்லப்பட்டுள்ளனர் என்பதையும் நானறிவேன். இந்தச் சம்பவங்கள் பலவற்றுக்கு, முன்னர் நந்தசேன கோட்டாபய உள்ளிட்ட அதிகாரிகள், அரசியல்வாதிகளால் ஆரம்பிக்கப்பட்ட தவறான மிரட்டல் அல்லது பயனற்ற வழக்குத் தாக்கல்களால் இடம்பெற்றதாகும்.
‘ஒரு பயங்கரவாதியைப் போல் கொல்லப்படுவேன்’ எனப் பயமின்றிக் கூறுகின்றேன். பொலிஸ்மா அதிபர், குடியரசின் பொலிஸ் மா அதிபரே அன்றி கோட்டாபயவின் தனிப்பட்ட பணியாள் அல்ல.
எனது உரைக்காக, எனக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும். அரசியல்வாதிகள் ஒவ்வொருவருடனும் தொடர்புவைத்து, அவர்களின் அபிப்பிராயங்கள், எண்ணங்களை விவாதிக்கும் ஜனநாயக அரசியலுக்கு நான் பழக்கப்பட்டுள்ளேன். அரசியல் எதிர்ப்பாளி ஒருவர், பயம், வன்முறை மூலம் அச்சுறுத்தல் விடுத்து, என்னை அமைதியாக்க முயற்சித்தமை, எனக்குக் கிடைத்த முதல் அனுபவமாகும்.
எனவே, எனக்கு மரணம் நிகழ்ந்தால், என்னைக் கொல்வதாக இதுவரை மிரட்டிய ஒரே மனிதனின் உத்தரவின் பெயரிலேயே, அது நடக்குமென நான் நம்புகிறேன் என்றும் அக்கடித்தில் குறிப்பிட்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
1 hours ago
3 hours ago