Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 டிசெம்பர் 27, வெள்ளிக்கிழமை
Freelancer / 2024 நவம்பர் 30 , பி.ப. 04:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
சமகி ஜன பலவேகய மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உள்ளிட்ட பல எதிர்க்கட்சிகளின் தலைவர்களை மாற்றுவது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளதாக, அந்த கட்சிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் தேர்தலை எதிர்கொள்ள கட்சிப் பொறிமுறையை பலப்படுத்த வேண்டியிருப்பதால் எதிர்க்கட்சிகள் அனைத்தும் மறுசீரமைக்கப்பட வேண்டும் என ஏற்கனவே கருத்துக்கள் எழுந்துள்ளன. இந்த மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தின் கீழ் இந்த நிலை மாற்றங்கள் நடப்பதாக அறியப்படுகிறது.
இதற்கிடையில், எதிர்கட்சி அரசியல் கட்சிகளின் குறைபாடுகளை ஆய்வு செய்வதற்காக சிறப்பு குழுக்களை நியமிக்க அந்தந்த கட்சி தலைவர்கள் உத்தேசித்துள்ளனர்.
இந்நிலையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் மேற்கொள்ளப்படவுள்ள மாற்றங்கள் தொடர்பில் பொதுமக்களின் கருத்துக்களையும் பெற்றுக்கொள்ள எதிர்பார்த்துள்ளதாக கட்சியின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கட்சி மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பு வழங்கவும் கட்சித் தலைவர்கள் தீர்மானித்துள்ளனர்.AN
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago
8 hours ago