Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை
Editorial / 2021 பெப்ரவரி 23 , மு.ப. 04:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 46ஆவது அமர்வானது சுவிற்ஸர்லாந்தின் ஜெனீவாவில் நேற்று (22) ஆரம்பமானது. இதன் ஆரம்ப உரையை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் மிஷெல் பஷ்லெட் நிகழ்த்தினார். எனினும், அவரது உரையில் இலங்கை குறித்து எதுவும் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை.
இதேவேளை, இலங்கை தொடர்பில் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை, 24ஆம் திகதி புதன்கிழமை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 46 ஆவது கூட்டத்தொடர் முதற்தடவையாக காணொளி ஊடாக இடம்பெறுகிறது. பேரவையின் கூட்டத்தொடர் அடுத்த மாதம் 23 ஆம் திகதி வரை நடைபெறும்.
இந்நிலையில், இலங்கையில் மனித உரிமைகள், நீதி, பொறுப்புக்கூறலைப் பாதுகாப்பதற்காக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் புதிய தீர்மானமொன்றை போரம் ஏஷியா, சி.ஜே.ஏ, சி.பி.ஏ, சி.பி.ஜே, எச்.ஆர்.டபிள்யூ, பேர்ள் உள்ளிட்ட அமைப்புகள் கோரியுள்ளன.
பாதிக்கப்பட்ட நபர்கள் மீது குறிப்பிட்டதொரு கவனத்துடன் இலங்கையில் மனித உரிமைகள் நீதியைப் பாதுகாப்பதற்காக, சர்வதேச உறுதிப்பாடொன்றுக்காக, மனித உரிமைகள் சபையின் 46ஆவது அமர்வில் பலமான தீர்மானமொன்றை நிறைவேற்றுமாறு, மனித உரிமைகள் சபையின் அங்கத்துவ நாடுகளிடையே தாங்கள் வலியுறுத்துவதாக குறித்த அமைப்புகள் தெரிவித்துள்ளன.
மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகரின் இவ்வாண்டு ஜனவரி மாத அறிக்கையில், இம்மாத ஆரம்பத்தில் வெளியிடப்பட்ட ஐக்கிய நாடுகளின் சிறப்பு பத்து நடைமுறை ஆணைகளின் இணைந்த மதிப்பீட்டில், இலங்கையில் மோசமடைந்து வரும் மனித உரிமைகள், பொறுப்புக்கூறல் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளதாக, குறித்த அமைப்புகள் மேலும் தெரிவித்துள்ளன.
தவிர, போர் முடிந்து ஏறத்தாழ 12 ஆண்டுகளுக்குப் பின்னரும் பொறுப்புக்கூறலுக்கான, நல்லிணக்கத்துக்கான உள்ளூர் முன்னெடுப்புகள், முடிவுகளை அளிக்க மறுத்துள்ளதாக உயர்ஸ்தானிகர் கோடிட்டுக் காட்டியுள்ளதாக இவ்வமைப்புகள் தெரிவித்துள்ளன.
அந்தவகையில், இணங்கிய பொறுப்புக்கூறல் நடவடிக்கைகளில், இலங்கை அரசாங்கம் தவறிய நிலையில், இதைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கும் அவசியம் காரணமாக, புதிய தீர்மானமொன்று உடனடியாக, கட்டமைக்கப்பட வேண்டும் என்றும் சுயாதீன சர்வதேச நடவடிக்கைகள் தேவை எனவும் குறித்த அமைப்புகள் மேலும் தெரிவித்துள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
7 hours ago