Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 22, வெள்ளிக்கிழமை
Editorial / 2023 ஒக்டோபர் 16 , மு.ப. 10:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்கிவிட்டு புதிய தேர்தல் முறை கொண்டுவரப்படும் என்று கூறி ஜனாதிபதி தேர்தலையும் பொதுத் தேர்தலையும் ஒத்திவைக்க முயற்சித்தால் அதற்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்பட தீர்மானித்துள்ளன.
ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி, உத்தர லங்கா சஹாபய, நிஸ்வ ஜனதா சந்தாயன ஆகிய கட்சிகள் மற்றும் குழுக்கள் இவ்விவகாரத்தில் இணைந்து செயற்பட தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதித் தேர்தலை அடுத்த ஆண்டு ஒக்டோபர் மாதத்துக்கு முன்னரும், பொதுத் தேர்தலை 2025 ஓகஸ்ட் மாதத்துக்கு முன்னும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது, திட்டமிட்டபடி தேர்தல் நடத்தப்படாவிட்டால், வாக்களிக்கும் உரிமையை பாதுகாக்கும் வகையில் சட்டத்தின் ஊடாக செயற்பட கட்சிகளும் குழுக்களும் தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது.
மக்களின் இறையாண்மைக்கு அரசாங்கம் சவால் விட முடியாது. என்று சுதந்திர மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ்,
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை அரசாங்கம் இல்லாதொழிக்கும் முயற்சியில் ஜனாதிபதித் தேர்தலையும் ஒத்திவைக்க முயற்சிக்கின்றது என்றார்.
மாகாண சபைத் தேர்தலையும், உள்ளூராட்சி சபைத் தேர்தலையும் பல்வேறு தந்திரங்களை கையாண்டு அரசாங்கம் ஒத்திவைத்தது போன்று ஜனாதிபதித் தேர்தலையும் பொதுத் தேர்தலையும் ஒத்திவைக்க முயற்சிக்கின்றது என்றார்.
நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்கிவிட்டு புதிய தேர்தல் முறைமை கொண்டுவரப்படும் என கூறுவதன் மூலம் அரசாங்கம் உண்மையில் நிறைவேற்று ஜனாதிபதி முறையை இல்லாதொழிக்கவோ அல்லது புதிய தேர்தல் முறையை அறிமுகப்படுத்தவோ முயற்சிக்கவில்லை, மாறாக தேர்தல்களை ஒத்திவைப்பதற்கு தேவையான பின்னணியை உருவாக்கவே முயற்சிக்கின்றது.
அரசாங்கம் தன்னிச்சையாக தேர்தலை பிற்போடினால் அதற்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு அனைத்து எதிர்க்கட்சிகளும் தீர்மானித்துள்ளதாகவும் பேராசிரியர் பீரிஸ் தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
59 minute ago
4 hours ago
5 hours ago