2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

ஆளும், எதிரணியினர் ஆடி பாடி ஒரே விருந்து

Editorial   / 2020 டிசெம்பர் 29 , பி.ப. 06:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆளும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த எம்.பிக்கள் சிலர், பிரியாவிடை விருந்துபசாரத்தில், குழுவாக பாடல்பாடுவதாக விளக்கமளித்து, இந்தப் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

இதில், அமைச்சர்களான விமல் வீரவன்ச, தயாசிறி ஜய​சேகர மற்றும் எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர்களான ஹரின் பெர்ணான்டோ, மனுஷ நாணயக்கார ஆகியோர், ஒன்றாக இணைந்து பாடல் பாடுகின்றனர்.

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் தலைவராகவும் சுங்க திணைக்களத்தின் பணிப்பாளராகவும் மற்றும் தொலைத்தொடர்புகள், விளையாட்டு, தொழிற்றுறை அமைச்சுக்களின் முன்னாள் செயலாளராகவும் கடமையாற்றிய சூலானந்த பெரேரா, தனது அரசாங்க சேவை நிறைவு பெறுவதற்கு 2 வருடங்களுக்கு முன்னதானாகவே தனது கடமைகளை இராஜினாமா செய்துள்ளார்.

அவருடைய பிரியாவிடை விருந்துபசாரத்திலேயே ஆளும்,எதிரணி உறுப்பினர்கள் குழுவாக நின்று பாடல்பாடி ஆடி மகிழ்ந்துள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .