Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 23, புதன்கிழமை
R.Maheshwary / 2021 மார்ச் 24 , மு.ப. 03:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் (unchr) இலங்கை தொடர்பில் மையப்படுத்தப்பட்ட அணியால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டது.
இலங்கையின் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளைப் பாதுகாத்தல் தொடர்பான இந்த பிரேரணை, பிரித்தானியாவினால் சமர்ப்பிக்கப்பட்டது கனடா,. ஜேர்மனி, மலாவி, மொண்டினீக்ரோ மற்றும் வடக்கு மசிடோனியா ஆகிய நாடுகள் சார்பாகவே அந்தப் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டது.
46/1 என அடையாளம் காணப்பட்ட அந்த வரைவு பிரேரணை, நேற்றையதினம் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, தனது தரப்பின் சார்பில் கருத்துகளை முன்வைத்த சீனா, பிரேரணை வாக்கெடுப்புக்கு விடுமாறு கோரிநின்றது.
அதனடிப்படையில், பிரேரணைக்கு ஆதரவாக 22 நாடுகள் வாக்களித்தன, எதிராக 11 நாடுகள் வாக்களித்தன, இந்தியா, ஜப்பான உள்ளிட்ட 14 நாடுகள் வாக்களிப்பதை தவிர்த்துகொண்டன.
அவர்களின் பிரேரணையில், 2012 ஆம் ஆண்டுமுதல் இலங்கையில் எடுக்கப்பட்ட நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமை நடவடிக்கைகள் குறித்து வெகுவாக கவனம் செலுத்தப்பட்டது.
பொறுப்புக்கூறல், நீதி மற்றும் நல்லிணக்கத்தை ஊக்குவிக்க இலங்கை விரிவான நடவடிக்கை எடுக்க வேண்டுமென அந்த பிரேரணையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இலங்கையில் மனித உரிமை மீறல்களுக்கான ஆதாரங்களை சேகரித்து பகுப்பாய்வு செய்வதன் முக்கியத்துவம் குறித்தும் அந்தப் பிரேரணையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இலங்கையில் மாகாண சபைத் தேர்தல்களை நடத்துதல் மற்றும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண சபைகளில் மாகாண சபை முறையைத் தொடர்வது குறித்தும், கொரோனா தொற்றை அடுத்து மத சுதந்திரத்துக்கு இடையூறுகள் விளைவிக்கப்பட்டமை தொடர்பிலும் அந்தப் பிரேரணையின் சுட்டிக்காட்டப்பட்டள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago