2025 பெப்ரவரி 05, புதன்கிழமை

அர்ச்சுனாவுக்கு அடித்த லோச்சனா ’லக்’

Editorial   / 2025 ஜனவரி 22 , பி.ப. 05:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

அனுராதபுரம் போக்குவரத்து பிரிவு அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்து,   அச்சுறுத்திய சம்பவம் தொடர்பாக அர்ச்சுனா ராமநாதனுக்கு எதிராக நிலுவையில் உள்ள வழக்கில் தான் சந்தேக நபர் என்று கூறி யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் இராமநாதன் அர்ச்சுனா நீதிமன்றத்தில், புதன்கிழமை (21) ஆஜரானார்.

இருப்பினும், அனுராதபுரம் தலைமை அதிகாரி இந்த வழக்கில் அவரை சந்தேக நபராக ஏற்றுக்கொள்ள நீதவான் நாலக சஞ்சீவ ஜெயசூர்யா அதை கடுமையாக  மறுத்துவிட்டார்.  

சந்தேக நபர் ராமநாதன் அர்ச்சுனா என்ற பெயரில் தனது தேசிய அடையாள அட்டையுடன் நீதிமன்றத்தில் ஆஜரான போதிலும், இந்த சம்பவம் தொடர்பாக அனுராதபுரம் காவல்துறையினரால் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அசல் பீபீ அறிக்கையில் சந்தேக நபரின் பெயர் அர்ச்சுனா  லோச்சனா என்று பட்டியலிடப்பட்டுள்ளதாக நீதவான் தெரிவித்தார்.

அதன்படி, இன்று (21)  நீதிமன்றத்தில் ஆஜரான சந்தேக நபரின் பெயருக்கும், பி அறிக்கையில் காவல்துறையினரால் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பெயருக்கும் இடையில் முரண்பாடு இருப்பதால், ராமநாதன் அர்ச்சுனா சந்தேக நபராக ஆஜராவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று நீதவான் கூறினார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X