2025 ஏப்ரல் 04, வெள்ளிக்கிழமை

“அச்சுறுத்தல் இல்லாதவர்களுக்கு பாதுகாப்பு நீக்கப்படும்”

Editorial   / 2024 மார்ச் 17 , பி.ப. 12:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாதுகாப்பு அச்சுறுத்தல் இல்லாதநிலையில், உயரடுக்கு பாதுகாப்பு   வழங்கப்பட்டுள்ள அரசியல்வாதிகள் உட்பட பல்வேறான தராதரங்களை கொண்ட முக்கியஸ்தர்கள் தொடர்பில், தேடியறிந்து   உடனடியாக அறிக்கை சமர்ப்பிக்குமாறு பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ்   அரச புலனாய்வு சேவைக்கு பணித்துள்ளார்.

  அரசியல்வாதிகளுக்கும் ஏனையவர்களுக்கும் தேவையற்ற வகையில் வழங்கப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் விரைவில் நீக்கப்படுவார்கள் என்றார்.

பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் இல்லாத நபர்களுக்கு சுமார் ஐயாயிரம் பொலிஸ் உத்தியோகத்தர்கள்  இவ்வாறு சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக  தமக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலைமை காரணமாக சாதாரண  கடமைகளுக்கு பொலிஸ் உத்தியோகத்தர்கள் பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X