2025 ஏப்ரல் 02, புதன்கிழமை

9 ஆவது ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று

Freelancer   / 2024 செப்டெம்பர் 21 , மு.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதித் தேர்தல் இன்று சனிக்கிழமை நடைபெறவுள்ளது.

காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்களிப்பு இடம்பெறவுள்ளது.

நீதியாகவும், சுதந்திரமாகவும் ஜனாதிபதித் தேர்தலை நடத்தி முடிப்பதற்குரிய அத்தனை ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருக்கின்றன என்று தேர்தல்  ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அத்துடன், வாக்காளர்கள் அனைவரும் தமது ஜனநாயகக் கடமையைச் சரிவர நிறைவேற்ற வேண்டும் என்றும் தேர்தல் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.

அதேவேளை, வாக்களிப்பு நேரம் மற்றும் அதன் பின்னரான காலப் பகுதியில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் அமுலில் இருக்கும் என்று பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது. (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .