2024 நவம்பர் 22, வெள்ளிக்கிழமை

4 ஆயிரம் உக்ரைனியர்கள் இலங்கையில் சிக்கினர்

Freelancer   / 2022 பெப்ரவரி 26 , பி.ப. 06:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் சுமார் 4 ஆயிரம் உக்ரைன் சுற்றுலாப் பயணிகள் தங்கியுள்ளனர் என்று சுற்றுலாத்துறை அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது. இவர்கள் 30 நாட்களுக்கான விசாவைப் பெற்றே நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.

உக்ரைன் மீது ரஷ்யப் படைகள் உக்கிரமான தாக்குதலை நான்காவது நாளாக நடத்தி வருகின்றது. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனைத் தாக்குதலை நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. உக்ரைன் நாட்டின் ஏராளமான இராணுவ இலக்குகளை ரஷ்யப் படைகள் தாக்கி அழித்துள்ளன.

இந்நிலையில், உக்ரைனில் தற்போது போர் மூண்டுள்ளதால், நாடு திரும்ப முடியாத உக்ரைன் பிரஜைகளுக்கு விசா கால எல்லையை நீடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
 
எனினும், விசா காலம் முடிவடைந்த பின்னர், நாடு திரும்ப விரும்பும் உக்ரைன் பிரஜைகளை, நாட்டுக்கு அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், இலங்கையிலிருந்து உக்ரைனுக்கு நேரடி விமான சேவை இல்லாமையால் வேறு நாடுகளின் ஊடாகப் பயணிக்கும் விமானங்களின் மூலம் சுற்றுலாப் பயணிகள் அனுப்பிவைக்கப்படுவார்கள் எனவும் சுற்றுலாத்துறை அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது. (K)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X