2024 நவம்பர் 21, வியாழக்கிழமை

சீரற்ற வானிலை காரணமாக காலியில் 28 ஆயிரம் பேர் பாதிப்பு

Editorial   / 2017 டிசெம்பர் 03 , பி.ப. 11:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

காலி மாவட்டத்தில் அண்மையில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக 7 ஆயிரத்து 697 குடும்பங்களைச் சேர்ந்த 28 ஆயிரத்து 684 பேர் பாதிக்கப்பட்டுள்ளனரென அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

அந்த மாவட்டத்தில் கடும் காற்று மற்றும் மழை காரணமாக எண்மர் பலியாகியுள்ளதுடன் மூவர் காணாமல் போயுள்ளனர்.

இதேவேளை, இடம்பெயர்ந்துள்ளவர்களுக்கான நிவாரணங்கள் பிரதேச சபைகளின் ஊடாக வழங்கப்பட்டு வருவதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பீலி தெரிவித்துள்ளார்.

மீன்பிடித் தொழிலுக்குச் சென்ற மூவரே காணாமல் போயுள்ளனரெனத் தெரிவிக்கப்படுகிறது. கடும் காற்று காரணமாக மீன்பிடிப் படகு கவிழ்ந்திருக்கலாம் எனச் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X