Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 03, வியாழக்கிழமை
Editorial / 2017 ஒக்டோபர் 02 , மு.ப. 02:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
“அறிவிலும் பண்பிலும் சிறந்த சிறுவர் சமுதாயத்தை உருவாக்குவதற்காக, அர்ப்பணிப்புடன் செயற்படுவதுடன், அவர்களது பாதுகாப்புக்காகவும் வளர்ச்சிக்காகவும் மேற்கொள்ளப்பட வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் மேற்கொள்கின்றது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வலியுறுத்தினார்.
உலக சிறுவர் தினமான நேற்று (01) பொலன்னறுவை றோயல் கல்லூரி மற்றும் கொழும்பு ஆனந்தா கல்லூரி ஆகியவற்றின் இணை ஏற்பாட்டில், பொலன்னறுவை றோயல் கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போதை ஒழிப்பு செயலமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
“போதையின் பிடியிலிருந்து இளம் தலைமுறையினரை மீட்பதற்காக, அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதுடன், அதன்பொருட்டு தேசிய கருத்திட்டங்கள் பலவும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன” என்றும் ஜனாதிபதி அவர்கள் இதன்போது குறிப்பிட்டார்.
“அரசாங்கம் இத்தகைய செயற்பாடுகளை மேற்கொள்ளும்போது, பிள்ளைகளை விட பணத்துக்கு அதிக மதிப்பளிக்கும் பணத்தின் பின்னால் பயணிக்கும் போதைப்பொருள் வியாபாரிகள் பாடசாலை மாணவர்களுக்கு போதைப் பொருட்களை இலவசமாக வழங்க கடந்த காலத்தில் முயற்சித்தனர் என்று தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், இத்தகைய சவால்மிகுந்த சூழ்நிலையில் பிள்ளைகளை பாதுகாப்பதற்காக சமூகத்தின் அனைத்து தரப்பினரும் அவதானத்துடன் செயற்பட வேண்டும்” என்றும் வலியுறுத்தினார்.
“வருடாந்தம் புகையிலை மற்றும் மதுபானத்தினால் அரசாங்கத்துக்கு கிடைக்கும் வருமானத்தை கருத்திற்கொள்ளாது ஏனைய வழிமுறைகளினால் வருமானத்தை ஈட்ட முயற்சிக்க வேண்டுமென தான் திறைசேரிக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாகவும், எதிர்கால தலைமுறையினரை போதைப் பொருட்களிலிருந்து விடுபட்ட சமுதாயமாக கட்டியெழுப்பும் நோக்குடனேயே தான் அவ்வாறு ஆலோசனை வழங்கியுள்ளேன்” என்றும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார்.
“புகையிலை மற்றும் போதைப்பொருட்களின் பாவனையை குறைத்து, சமூகத்தை அதிலிருந்து விடுவிப்பதன் பொருட்டு செயற்படுவதற்கான சிறந்த ஊடகமாகவும் தொடர்பாளர்களாகவும் பிள்ளைகள் காணப்படுகின்றனர்” என்றும் ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago