2024 நவம்பர் 21, வியாழக்கிழமை

காலியில் கனமழை; 2,000 குடும்பங்கள் இடம்பெயர்வு

Amirthapriya   / 2018 மே 14 , மு.ப. 10:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

நேற்று முன்தினம், காலியில் பெய்த கனமழையினால், சுமார் இரண்டாயிரம் குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளதாக, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

நேற்று முன்தினம் பெய்த கனமழையைத் தொடர்ந்து, மொராகொட கால்வாய் பெருக்கெடுத்ததால், காலியின் தாழ்நிலப் பிரதேசங்கள், வௌ்ளநீரில் மூழ்கின.

காலி நகரை அண்டிய, அக்மீமன, பொட்டல மற்றும் பலபிட்டிய பிரதேச செயலகங்களுக்குட்பட்ட, 7 ஆயிரத்து 736 பேர் இடம்பெயர்ந்துள்ளதாக, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

வௌ்ள நீரினால், 150 வீடுகள் சேதமடைந்துள்ளதோடு, 20 மண்சரிவுகளும் இடம்பெற்றுள்ளது.

​கடந்த 12ஆம் திகதியன்று காலை 8 மணியிலிருந்து,13ஆம் திகதி காலை 6 மணிவரையில், காலியில், 166.7 மில்லி மீற்றர் மழைவீழச்சிப் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X