Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 23, சனிக்கிழமை
Editorial / 2017 செப்டெம்பர் 28 , பி.ப. 05:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எச்.ஏ. ஹுஸைன்
மேல் மாகாணத்தின் கரையோரப் பகுதியிலும் காலியிலும், மாநகரத்தின் கழிவுகளை மீள் சுழற்சிக்கு உட்படுத்தும் நடவடிக்கைகளுக்காக ஜனதாக்ஸன், செவன்த, அபிவிருத்தி உதவிக்கான இலங்கை நிலையம் ஆகிய 3 நிறுவனங்களுக்கு அமெரிக்காவின் சர்வதேச அபிவிருத்திக்கான முகவர் அமைப்பு (யூஎஸ்.எயிட்) 97 மில்லியன் ரூபாய்களை வழங்கியுள்ளதாக, இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான பணிக்குழுத் தலைவர் கலாநிதி அன்ரூவ் சிஸன் தெரிவித்தார்.
முறையற்ற விதத்தில் வீசப்பட்டுள்ள பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன்கள் கடலுக்குள் செல்வதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளில் உதவவுள்ள திண்மக் கழிவு முகாமைத்துவம் தொடர்பில் மக்களின் விழிப்புணர்ச்சியை அதிகரிப்பது, மற்றும் மக்களுக்குப் பயிற்சிகளை வழங்குவது போன்ற நடவடிக்கைகளையும் இந்த உதவியினூடாக அமுல்படுத்த திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
கடந்த ஒரு தசாப்த காலப் பகுதியில் மாநகரக் கழிவுகளை அகற்றும் வழிமுறைகளில் கவனம் செலுத்துதல் என்ற நிலையிலிருந்து அவற்றைத் தடுத்தல் மற்றும் மீள் சுழற்சி என்ற நிலைக்கு கவனம் மாறியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இலங்கை தனது நடவடிக்கைகளை மேலும் துரிதப்படுத்துவதற்கும், மாநகரக் குப்பை அகற்றல் முகாமைத்துவத்தை குப்பைகளின் உயர் மட்டத்துக்குக் கொண்டு செல்வதற்கும் யூ.எஸ்.எயிட் அமைப்பின் உதவி துணை புரியும் எனவும் அவர் தெரிவித்தார்.
மீள் சுழற்சி செய்யக் கூடிய மீண்டும் பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக்கினை உரமாக்குதல், விற்பனையின் மூலம் வாழ்வாதாரத்தையும் வருமானத்தையும் ஈட்டுதல் ஆகியவற்றிற்கும் இந்தத் திட்டம் பயன்படும் என்றும் யூஎஸ்.எயிட் அறிவித்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago
5 hours ago