2025 ஜனவரி 29, புதன்கிழமை

ஐவர் படுகொலை: ஒருவர் கைது வாகனமும் சிக்கியது

Editorial   / 2024 ஜனவரி 24 , பி.ப. 02:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெலியத்தவில் திங்கட்கிழமை (22) ஐந்து பேர் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு தலைமை தாங்கிய இலங்கையைச் சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அத்துடன்  அதற்குப் பயன்படுத்திய வாகனம் கைப்பற்றப்பட்டுள்ளது என பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

மாத்தறை பிரிவுக்கு பொறுப்பான அதிகாரியின் மேற்பார்வையில் ஹக்மன பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட அதிகாரிகள் குழு நடத்திய விசாரணையில், கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கையில் இருந்து இந்த குற்றத்திற்கு மூளையாக செயல்பட்டதாக கூறப்படும் சமன் குமார என்ற 54 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.  குற்றத்திற்காக வந்த 65-2615 இலக்கம் கொண்ட மிட்சுபிஷி பெஜேரோ ஜீப்பையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர் என  அமைச்சு தெரிவித்துள்ளது.

குற்றத்தை புரிவதற்காக வந்தவர்,  வாகனத்தை செலுத்தி வந்துள்ளார் என    மேலும் தெரியவந்துள்ளதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .