2024 டிசெம்பர் 22, ஞாயிற்றுக்கிழமை

ஆணின் கூரிய ஆயுதத்தை மடக்கிய பெண்ணின் பெரிய கத்தி

Editorial   / 2022 பெப்ரவரி 06 , பி.ப. 03:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

பேக்கரிக்கு வருகைதந்த நபர், அங்கிருந்த பெண் ஊ​ழியரை, கூரிய ஆயுதமொன்றை காண்பித்து அச்சுறுத்த முயன்றுள்ளார். எனினும், தன்னை சுதாகரித்துக்கொண்ட அப்பெண், பாண் வெட்டும் கத்தியை காண்பித்து பதிலுக்கு அச்சுறுத்தியுள்ளார். இதனால், அந்நபர், அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளார். இந்த சம்பவம் ஹக்மன பிரதேசத்திலுள்ள பேக்கரியில் இடம்பெற்றுள்ளது.

 தான் வைத்திருந்த கூரிய ஆயுதத்தை விடவும் பெரிய கத்தியை அப்பெண் வைத்திருந்ததைப் பார்த்தே அந்த நபர் தப்பியோடியுள்ளார். இது தொடர்பில் ஹக்மன பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த வர்த்தக நிலையத்துக்கு வருகைத் தந்திருந்த சந்தேகநபர் தப்பிச் செல்வதற்குப் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் இலக்கத்தையும் பொலிஸாருக்கு அப்பெண் வழங்கியுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X