2024 டிசெம்பர் 18, புதன்கிழமை

காணாமல் போன இளைஞன் சடலமாக மீட்பு

Kogilavani   / 2015 பெப்ரவரி 09 , மு.ப. 07:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.இஸட்.எம்.இர்பான்


ஹம்பாந்தோட்டை சிப்பிக்குளத்தில் நேற்று மாலை நீராடச் சென்று காணாமல் போன இளைஞன் இன்று திங்கட்கிழமை(9) சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக ஹம்பாந்தோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.


ஹம்பாந்தோட்டை, சிப்பிக்குளத்தை சேர்த்த 22 வயதுடைய முஹம்மட் முஷாரப்; என்ற இளைஞனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.


இவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை(9) மேற்படி குளத்தில் நீராடச் சென்று காணாமல் போனார். இவரை தேடும்பணியில் பிரதேச மக்கள் ஈடுபட்டபோதே இவர் சிப்பிக்குளத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்


சடலம் பிரேத பரிசோதனைக்காக ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .