2024 நவம்பர் 24, ஞாயிற்றுக்கிழமை

விஞ்ஞான பாட அடைவு மட்டத்தை அதிகரிக்கும் செயலமர்வு

Kogilavani   / 2014 செப்டெம்பர் 29 , மு.ப. 06:04 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ.ஹுஸைன்


கல்வி அமைச்சின் 1000 பாடசாலை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் பாடசாலைகளின்   கல்விப் பொது தராதர பரீட்சை பெறுபேற்றில் விஞ்ஞான  பாடத்தின் அடைவு மட்டத்தினை அதிகரிப்பதற்கான  5 நாள் வதிவிட செயலமர்வு கம்பஹா மாவட்டத்தின் தொம்பே சியனே ஆசிரியர் பயிற்சி நிலையத்தில் கடந்த ஒரு வாரகாலமாக நடைபெற்றது.

இதில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் 1000 பாடசாலை அபிவிருத்தி திட்டத்தின்கீழ் பணியாற்றும்  விஞ்ஞான பாட ஆசிரியர்கள் மற்றும் செய்யப்பட்ட தென், வடமத்திய, மத்திய மாகாண ஆசிரியர்களும் கலந்துகொண்டனர்.

இதன்போது விஞ்ஞான வினாத்தாள் தொடர்பான பகுப்பாய்வு, செய்முறை பயிற்சிகளில் இவர்கள் ஈடுபட்டனர்.

இச்செலமர்வில் கலந்து கொண்ட இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் பி.உதயரூபன் வட கிழக்கு விஞ்ஞான ஆசிரியர்கள் எதிர்நோக்கும் தொழில்சார் பிரச்சனைகள் பற்றி கல்வி அமைச்சின் அதிகாரிகளிடம் முன்வைத்தார்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .