2025 ஏப்ரல் 05, சனிக்கிழமை

'மணி' க்கு புள்ளடியிட்ட வாக்குச்சீட்டுகள் மீட்பு

Kanagaraj   / 2014 மார்ச் 31 , மு.ப. 10:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

காலி,உலுச்டிகே ரிச்சட் பத்திரண வித்தியாலத்திலிருந்து புள்ளடியிடப்பட்ட வாக்குச்சீட்டுகள் மீட்கப்பட்டுள்ளன. காலையில் பாடசாலைக்கு சென்ற மாணவர்களே இந்த வாக்குச்சீட்டுகளை சேகரித்து அதிபரிடம் கையளித்துள்ளனர்.

மக்கள் விடுதலை முன்னணிக்கு (ஜே.வி.பி) மணிசின்னத்திற்கு அளிக்கப்பட்ட வாக்குச்சீட்டுகளே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த பாடசாலை வாக்களிப்பு மத்தியநிலையமாக இருந்துள்ளது. வாக்குச்சீட்டுகள் மீட்கப்பட்டுள்ளமை தொடர்பில் உதவி தேர்தல்கள் ஆணையாளர் பீமல் இந்துசிரியின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதையடுத்து பாடசாலைக்கு வருகைதந்த அவர் வாக்குச்சீட்டுகளை முத்திரையிட்டு எடுத்துச்சென்றுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X