2025 ஏப்ரல் 05, சனிக்கிழமை

'தீ பந்தத்தை' குழப்பிய 'வெற்றிலை'

Kanagaraj   / 2014 பெப்ரவரி 16 , மு.ப. 10:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

தீ பந்தத்தை சின்னமாக கொண்ட ஜனநாயக கட்சியின் தலைவரும் முன்னாள் இராணுவத்தளபதியுமான சரத் பொன்சேகா பெலியத்தையில் பங்குபற்றவிருந்த தேர்தல் பிரசார கூட்டத்தை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி (வெற்றிலைச்சின்னம்) ஆதரவாளர்கள் குழப்பியுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

தங்களுடைய தலைவரின் பாதுகாப்பை கவனத்தில் கொண்டு அந்த கூட்டத்தை நேற்றையதினம் நடத்தாமல் விட்டோம் என்று ஜனநாயக கட்சியின ஹம்பாந்தோட்டை மாவட்ட குழுத்தலைவர் தேவக வீரசிங்க தெரிவித்தார்.

இந்த கூட்டத்தை பண்டாரவத்தை சந்தைக்குறிய இடத்தில் நடத்துவதற்கு பெலியத்தை பிரதேச சபையினால் அனுமதி வழங்காமையினால் தனியாருக்கு சொந்தமான இடம்மொன்றில் கூட்டத்தை நடத்துவதற்கு சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தன. இந்த நிலையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியையை சேர்ந்த ஆதரவாளர்கள் சுமார்; 200 பேர் அவ்விடத்தில் கூட்டத்தை நடத்தவிடாது 'கூ' கோஷம் எழுப்பி இடையூறு விளைவித்ததாக ஜனநாயக கட்சியினர் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X