2025 ஏப்ரல் 05, சனிக்கிழமை

மாத்தறை சம்பவம்; நால்வர் சரண்

Kanagaraj   / 2013 ஒக்டோபர் 20 , பி.ப. 01:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாத்தறை சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் நால்வர் இன்று ஞாயிற்றுக்கிழமை பொலிஸில் சரணடைந்துள்ளனர்.

ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவருக்கு எதிராக மாத்தறையில் கடந்த 5 ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெற்ற பேரணியின் மீது தாக்குதல் நடத்தினார்கள் என்ற சந்தேகிக்கப்படுகின்றவர்களில் நால்வரே சரணடைந்துள்ளனர்.

சட்டத்தரணியூடாக பொலிஸில் சரணடைந்த இந்த நால்வரும் மாத்தறை நீதவான் முன்னிலையில் இன்றைய தினமே ஆஜர்படுத்தப்பட்டனர். சந்தேகநபர்கள் நால்வரையும் நாளை திங்கட்கிழமை வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன், இன்றைய தினம் அடையாள அணிவகுப்பு நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் நீதவான் பொலிஸாருக்கு பணித்துள்ளார்.

சரணடைந்தவர்களில் வெலிகம பிரதேச சபையின் எதிர்க்கட்சித்தலைவரும் (ஐ.தே.க) அடங்குவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X