2025 ஏப்ரல் 05, சனிக்கிழமை

சிறுமி துஷ்பிரயோகம்: முன்னாள் படைவீரருக்கு சிறை

Kanagaraj   / 2013 ஜூன் 27 , பி.ப. 08:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாத்தறை, தெலிஜ்ஜவில வித்தியாலய பரீட்சை மண்டபத்தில் வைத்து ஒன்பது வயது சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய விமானப்படையின் முன்னாள் படைவீரருக்கு 15 வருடகால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மேற்படி வழக்கு மாத்தறை மேல் நீதிமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொண்டபோதே  நீதிபதி பிரியந்த டி சில்வா கடுமையான வேலைகளுடன் கூடிய 15 வருட சிறைத்தண்டனை விதித்தார்.

பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இரண்டு இலட்சம் ரூபாவை நட்டஈடாகவும், 10 ஆயிரம் ரூபாவை தண்டமாகவும் செலுத்துமாறும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

மேற்படி சம்பவத்துடன் குற்றஞ்சாட்டப்பட்டவர், மாத்தறை தெலிஜ்ஜவில வித்தியாலய பரீட்சை மண்டபத்தில் மது அருந்திவிட்டு குறித்த சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது. அந்த குற்றச்சாட்டுகள் நிரூபணமாகியுள்ளன என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் அறிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X