2025 ஏப்ரல் 05, சனிக்கிழமை

'பூக்கள் விற்றோர் கைது'

Kanagaraj   / 2013 ஏப்ரல் 25 , மு.ப. 06:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

சித்ரா பௌர்ணமி தினமான இன்று வியாழக்கிழமை களுத்துறை விஹாரைக்கு அருகில் பூக்கள் விற்பனை செய்துகொண்டிருந்த 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் பெண்கள் ஏழுபேர் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர். களுத்துறை சுற்றாடல் பிரிவு பொலிஸாரே இவ்வாறு கைது செய்துள்ளனர்.

பூக்கள் விற்பதற்காக ஒதுக்கப்பட்டுள்ள கடைகளில் இல்லாமல் பாதசாரிகளின் கடவையில் பூக்கள் விற்றுக்கொண்டிருந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிரா வழக்குத்தாக்கல் செய்யவிருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தாங்கள் அந்த பகுதியில் நீண்டநாட்களாக பூக்கள் விற்பனை செய்து வருவதாகவும் அதில் கிடைக்கின்ற வருமானத்தை வைத்தே வாழ்க்கை நடத்துவதாகவும் கைது செய்யப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X