2024 நவம்பர் 28, வியாழக்கிழமை

'தற்போதைய பிரச்சினை எதிர்காலத்தில் சிறுவர்களின் ஒற்றுமைக்கு பாரிய சவாலாக அமையும்'

Kogilavani   / 2013 மார்ச் 31 , மு.ப. 05:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

இ.அம்மார்

'தற்போது நாட்டில் நிலவும் பிரச்சினை எதிர்காலத்தில் சின்னஞ் சிறார்களின் மத்தியில் ஒற்றுமைக்கு பாரிய சவாலாக அமையும். எனவே இந்தப் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு கொண்டு வருதல் அவசியமாகும்' என குருநாகல் பொலிஸ் நிலையத்தின் அத்தியட்சகர் சில்வா தெரிவித்தார்.

பாதுகாப்புத் தொடர்பான அறிவுறுத்தல் கூட்டம் பறஹகஹதெனிய தேசிய பாடசாலையில் நேற்று நடைபெற்றது.

மாவத்தகம பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

'வெளிநாட்டில் வாழும் மக்களை விட எம்முடைய நாட்டு மக்கள் மிகுந்த நிதானத்துடன் செயற்படக் கூடியவர்கள்.

இது ஒரு ஜனநாயக நாடு. யாரும் எந்த சமயத்தையும் பின்பற்ற முடியும். அடுத்தவர்களுக்கு இடையூறு இல்லாமல் தத்தமது சமயப் பண்பாடுகளை பின்பற்றுதல் அவசியமாகும்.

தற்போது நாட்டில் நிலவும் பிரச்சினை எதிர்காலத்தில் சின்னஞ் சிறார்களின் மத்தியில் ஒற்றுமைக்கு பாரிய சவாலாக அமையும். எனவே இந்தப் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு கொண்டு வருதல் அவசியமாகும்' என்றார்.

'இன்று இன ஒற்றுமைக்கு மாவத்தகம நகரில் உள்ள வர்த்தக சங்கம் ஒரு எடுத்தக் காட்டாக உள்ளது. இந்தப் பிரதேசத்தில்  சிங்கள, முஸ்லிம், தமிழ் ஆகிய  மக்கள் பரஸ்பரம், விட்டுக்கொடுப்பு, நல்லெண்ணம்; புரிந்துணவுடன் பல்வேறு சமூக் இயக்க நடடிக்கையில் ஈடுபட்டு வருகின்றார்கள்.

சட்டத்தை பொதுமக்கள் கையில் எடுப்பதை தவிர்த்துக் கொள்ளல் வேண்டும்' என இதன்போது, மாவத்தகம பொலிஸ் நிலையப் பொறுப்பாளர் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .