2025 ஏப்ரல் 06, ஞாயிற்றுக்கிழமை

மீன் விற்பனை நிலையத்திற்காக அடிக்கல் நடல்

Super User   / 2013 மார்ச் 04 , மு.ப. 08:58 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.இஸட்.எம்.இர்பான்


ஹம்பாந்தோட்டை பொது மீன் விற்பனை நிலையத்தில் மீன் விற்பனை நிலையமொன்றினை நிர்மாணிக்க மீன்பிடி நீரியல் துறை அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்கான அடிக்கல் நேற்று ஞாயிற்றுக்கிழமை சபாநாயகர் சமல் ராஜபக்ஷ, மீன்பிடி நீரியல் துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன ஆகியோரினால் நடப்பட்டது.

அத்துடன், ஹம்பாந்தோட்டை மீனவர்களின் மிகவும் முக்கிய பிரச்சினையான நீர்தடுப்பு சுவர் நிர்மாணிப்பதற்கென இரண்டு கோடி ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வினை ஹம்பாந்தோட்டை மேயர் எராஜ் ரவீந்திர பிரணாந்து ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X