2024 நவம்பர் 28, வியாழக்கிழமை

கடலில் மூழ்கி ஒருவர் உயரிழப்பு

Super User   / 2012 நவம்பர் 25 , பி.ப. 03:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.இஸட்.எம்.இர்பான்)

தங்காலை, பரவிவேல்ல பிரதேச கடற்கரையில் மூழ்கி ஒருவர் உயரிழந்துள்தாக தங்காலை பொலிஸார் தெரிவித்தனர்.

சுற்றுல்லா மேற்கொண்டு நிட்டம்புவவிலிருந்து கதிர்காமம் நோக்கி வந்த ஒரு குழுவினர் தங்காலை, பரவிவேல்ல பிரதேச கடற்கரையில் நேற்று சனிக்கிழமை மாலை நீராயுள்ளனர்.

இதன்போது நான்கு பேர் கடலில் அடித்து செல்லப்பட்டுள்ளனர். இவர்களில் மூன்று பேரை தங்காலை கடற் படையினரும் தற்காப்பு பிரிவினரும் இணைந்து மீட்டுள்ளனர். மற்றைய நபர் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நிட்டம்புவ, எல்லாவல பிரதேசத்தை சேர்ந்த 34 வயதுடைய இரண்டு குழந்தைகளின் தந்தை நீரில் மூழ்கி உயிரிழந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகரள தங்காலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X