2024 நவம்பர் 28, வியாழக்கிழமை

போத்தல நால்வர் கொலை; சந்தேகநபர்களுக்கு விடுதலை

Menaka Mookandi   / 2012 நவம்பர் 06 , பி.ப. 01:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

காலி, போத்தல பகுதியில் நால்வர் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்த நான்கு சந்தேகநபர்களையும் விடுதலை செய்ய பத்தேகம நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

குறித்த சந்தேகநபர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை நிரூபிக்க போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறியே அவர்களை விடுதலை செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

இதேவேளை, படுகொலை செய்யப்பட்ட நால்வரில் மூவரின் இறுதிக் கிரியைகள் இன்று போத்தல, மஹாவத்த பொது மயானத்தில் நடைபெற்ற நிலையில் மயானப் பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

இராணுவம் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டு குறித்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி...

4 சடலங்கள் மீட்டமை தொடர்பில் மூவர் கைது


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X