2025 ஏப்ரல் 14, திங்கட்கிழமை

தென்கொரிய கட்டிடமொன்றிலிருந்து விழுந்து காலியைச் சேர்ந்த இளைஞன் உயிரிழப்பு

Menaka Mookandi   / 2012 செப்டெம்பர் 29 , மு.ப. 08:58 - 0     - 658

தென் கொரியாவின் க்வென்ஜூ நகரில் அமைந்துள்ள மாடிக்கட்டிடமொன்றிலிருந்து விழுந்து காலியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

காலி, வலஹாந்துவ பிரதேசத்தைச் சேர்ந்த பிரியந்த (41 வயது) என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

தனது நண்பரொருவர் கடமையாற்றும் இடத்திலிருந்து தவறுதலாக விழுந்தே இவர் உயிரிழந்துள்ளார் என அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவரது சடலம் நாளை மறுதினம் திங்கட்கிழமை கொழும்புக்கு கொண்டுவரப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. (சமிந்த மடவல)

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X