2024 நவம்பர் 28, வியாழக்கிழமை

காலி மருத்துவர்களின் பகிஷ்கரிப்பினால் நோயாளர்கள் சிகிச்சை பெற முடியாமல் அவதி

Super User   / 2012 செப்டெம்பர் 27 , பி.ப. 11:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                              (ஒலிந்திய ஜயசூரிய)

காலி மேயர் மீது நடவடிக்கை மேற்கொள்ள தவறியமைக்கு எதிராக நேற்று மேற்கொள்ளப்பட்ட மருத்துவர்களின் அடையாள வேலை நிறுத்தம் காரணமாக, ஆயிரக்கணக்கான நோயாளர்களினால் காலி மாவட்டத்திலுள்ள வைத்தியசாலைகளிலும் மருந்தகங்களிலும் சிகிச்சை பெற முடியாத நிலை ஏற்பட்டது.

சுமார் 90 கிராமிய, மாவட்ட வைத்தியசாலைகள் மற்றும் மத்திய மருந்தங்களை சேர்ந்த 2000 வைத்தியர்களும் வேறு ஊழியர்களும்  19 மாவட்ட சுகாதார, மருத்துவ அதிகாரி ஒருவரை கடமை செய்யவிடாது தடை செய்ததாக கூறப்படும் காலி மேயர் மெத்சிறி மீது நடவடிக்கை எடுக்கத் தவறிய அதிகாரிகளுக்கு எதிராக பணிப்பகிஷ்கரிப்பில் இன்று ஈடுபட்டனர்.

காலியில் ஆற்றங்கரைகளிலுள்ள மனித மலத்தை அகற்றுவதற்கான நடவடிக்கை மேற்கொள்வதற்கு காலி மேயர் தவறியதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் கூறியுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X