2024 நவம்பர் 28, வியாழக்கிழமை

காலி மருத்துவர்கள் நாளை பகிஷ்கரிப்பில் ஈடுபடத் தீர்மானம்

Super User   / 2012 செப்டெம்பர் 26 , மு.ப. 08:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                               (ஒலிந்தி ஜயசுந்தர)

காலி மாவட்டத்தைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் நாளை வியாழக்கிழமை அடையாள வேலைநிறுத்தமொன்றில் ஈடுபடவுள்ளதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

காலியிலுள்ள ஆற்றங்கரைகளில் மனிதக் கழிவுகள் அகற்றப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இப்பணிப் பகிஷ்கரிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.

இம்மனிதக் கழிவுகளை சுகாதாரமான முறையில் அகற்றப்பட வேண்டியதன் அவசியத்தை காலி மாநகர சபையிடம், காலி சுகாதார  மருத்துவ அதிகாரி டாக்டர் வெனுர சிங்காராச்சி, வலியுறுத்தியதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் உதவிச் செயலாளர் டாக்டர் நளின் ஆரியரட்ண கூறினார்.

'இப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு, மேயர் மறுத்துவிட்டார். இந்நிலைமையானது சுகாதார மருத்துவ அதிகாரிக்கும் இடையில் பல பிரச்சினைகள் ஏற்பட வழிவகுத்துள்ளது' என டாக்டர் ஆரியரட்ன கூறினார்.

'இவ்விடயத்தை புறக்கணிக்க முடியாது.  அதிகாரிகள் இப்பிரச்சினையை உடனடியாக தீர்க்க வேண்டும.  இப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு சட்ட நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட வேண்டும்' என  அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X