2024 நவம்பர் 28, வியாழக்கிழமை

'நில்வெல்ல' புது மீனவ துறைமுகம் மக்களிடம் கையளிப்பு

A.P.Mathan   / 2012 ஜூலை 23 , மு.ப. 03:15 - 0     - {{hitsCtrl.values.hits}}


மாத்தறை திக்வெல்ல பிரதேசத்திலுள்ள நில்வெல்ல மீனவ கிராமத்திற்காக 430 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட புதிய மீனவ துறைமுகத்தை திறந்துவைத்து மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு அண்மையில் கடற்றொழில் நீரியல் வள அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரட்ன தலைமையில் நடைபெற்றது.

மீன்பிடிதுறைக்கான வேண்டிய சகல வசதிகளையும் கொண்ட இம்மீனவ துறைமுகமானது நீண்ட காலமாக தமது படகுகளை நிறுத்திவைப்பதற்காக இடமில்லாமல் இருந்த நில்வெல்ல பிரதேச மீனவர்கள் அனுபவித்த கஷ்டங்களுக்கு தீர்வாக அமையும்.
8 ஹெக்டயர் பரப்பளவைக் கொண்ட இத்துறைமுகம் 100 மீட்டர் ஆழமானதாகும். 36000 எரிபொருள் கனவளவைக் கொண்ட தாங்கிகளும் 10 மொன் பனிக்கட்டி உற்பத்தி செய்யக் கூடிய குளிர்சாதன பெட்டியும் ஓரு மீன் விற்பனை நிலையமும் கொண்டுள்ளன.

இளைஞர் விவகார மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் சந்திரசிரி கஜதீர, நாடாளுமன்ற உறுப்பினர் சனத் ஜயசூரிய, தென் மாகாண கடற்றொழில் அமைச்சர் டீ.வீ உபுல், மற்றும் தென் மாகாண கல்வி அமைச்சர் சந்திமா ராசபுத்திர ஆகியோரும் இந் நிகழ்வில் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X