2025 ஏப்ரல் 10, வியாழக்கிழமை

ஏழுமலை கோயிலிலுள்ள வேல் உட்பட பித்தளை உபகரணங்கள் கொள்ளை

Menaka Mookandi   / 2012 ஜூன் 21 , பி.ப. 12:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

கதிர்காமம், ஏழுமலை கோயிலில் உள்ள வேல் உட்பட பித்தளை உபகரணங்கள் பல கொள்ளையிடப்பட்டுள்ளன என்று பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 

குறித்த கோயிலின் களஞ்சியசாலையில் வைக்கப்பட்டுள்ள வேல், பித்தளை விளக்குகள் உள்ளிட்ட பெறுமதிமிக்க பழமைவாய்ந்த பூஜை உபகரணங்களே இவ்வாறு கொள்ளையிடப்பட்டுள்ளன என்று மேற்படி முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கொள்ளைச் சம்பவம் கடந்த மார்ச் 15ஆம் திகதிக்கும் ஜூன் 6ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியிலேயே நடந்திருக்கலாம் என்றும் இருப்பினும் இது தொடர்பில் தனக்கு நேற்றைய தினமே தெரியவந்ததாகவும் குறித்த கோயிலின் பொறுப்பதிகாரி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார். (கிருஷான் ஜீவக ஜயருக்)

இந்த முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸார் குறித்த கொள்ளைச் சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X