2024 நவம்பர் 28, வியாழக்கிழமை

லக்ஷ்மன் ஹுலுகல்லவிற்கு மக்கள் விடுதலை முன்னணி சவால்

Super User   / 2012 ஜூன் 17 , பி.ப. 04:05 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கெலும் பண்டார)


கட்டுவான துப்பாக்கி சூட்டு சம்பவத்தை அடுத்து தேசிய பாதுகாப்புக்கான ஊடக நிலையத்தின் பணிப்பாளர் லக்ஷ்மன் ஹுலுகல்லவினால் வெளியிடப்பட்ட அறிக்கையின் உண்மை தன்மையை நீருபிக்குமாறு மக்கள் விடுதலை முன்னணி இன்று ஞாயிற்றுக்கிழமை சவால் விடுத்துள்ளது.

மக்கள் விடுதலை முன்னணியின் கூட்டமொன்று ஹம்பாந்தோட்டை, கட்டுவான பிரதேசத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற போது இனந்தெரியாத நபர்களினால்  மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டினால் அக்கட்சியின் ஆதரவாளர்கள் இருவர் கொல்லப்பட்டனர்.

மக்கள் விடுதலை முன்னணியிலுள்ள இரண்டு குழுக்களிற்கு இடையிலான முரண்பாட்டின் பின்னணியே இந்த துப்பாக்கி சூடு என லக்ஷ்மன் ஹுலுகல்ல இச்சம்பவத்தினை அடுத்து தெரிவித்திருந்தார்.

பாதாள உலக குழுவை சேர்ந்தவர்களினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவத்தை அடுத்து ஒரு நபர் விட்ட அறிக்கையானது கேலிக்கையாக உள்ளது என மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் அனுர குமார திசாநாயக்க இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்தார்.

குறித்த அறிக்கை தன்மையின் உண்மை குறித்து நிரூபிப்பதற்கு சாத்தியப்பாடுகள் இருந்தால் நீருபிக்குமாறு அவர் சவால் விட்டார். (படங்கள்: பிரதீப் தில்ருக்ஷன)



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X