2024 நவம்பர் 28, வியாழக்கிழமை

அதிவேக நெடுஞ்சாலை பஸ் கட்டணமும் அதிகரிப்பு

Super User   / 2012 பெப்ரவரி 14 , பி.ப. 04:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஒலிந்தி ஜயசுந்தர)

எரிபொருட்களின் விலை அதிகரிப்பினை அடுத்து தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் பிரயாணிகளின் பஸ் கட்டணம் 70 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்தது.

இதற்கிணங்க முன்னர் 400 ரூபாவாக இருந்த பஸ் கட்டணம் தற்போது 470 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக, தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் ரொஷான் குணவர்தண தெரிவித்தார்.

இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பஸ்களும் 20 வீதத்தினால் கட்டணங்களை உயர்த்திலுள்ள நிலையில் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் ஈடுபடும் பஸ்கள் 17 சதவீதத்தினால் மாத்திரமே கட்டணங்களை அதிகரித்துள்ளன என அவர் குறிப்பிட்டார்.

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில்; எட்டு இலங்கை போக்குரத்து சபையின் எட்டு பஸ்களும் 4 தனியார் பஸ்களும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் வழிநடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X