2025 ஏப்ரல் 10, வியாழக்கிழமை

பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் இடமாற்றத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்

Super User   / 2011 டிசெம்பர் 23 , பி.ப. 05:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

காலி மாவட்டத்திலுள்ள ஹபராதுவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.பி. வெலகெதரவை இடமாற்றம் செய்வதற்கு எதிராக ஹபராதுவை நகரில் ஆயிரத்துக்கும் அதிகமானோர் இன்று டயர்களை எரித்து  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் காலி – மாத்தறை வீதயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சட்டவிரோத செயற்பாடுகளுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொண்டு, குற்றவாளிகளை கைது செய்த நேர்மையான பொலிஸ் அதிகாரியொருவரை அதிகாரிகள் இடம் மாற்றுவதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் குற்றம் சுமத்தினர்.

மேற்படி பொறுப்பதிகாரி கடமையை பொறுப்பேற்றபின் அப்பகுதியில் குற்றச்செயல்கள் குறைந்துவருவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.  இந்த இடமாற்றத்தின் பின்னணியில் அப்பகுதி அரசியல்வாதியொருவர் இருப்பதாக அவர்கள் கூறினர்.

சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடியபின் மேற்படி இடமாற்றத்தை இரத்துச் செய்வது குறித்து ஆராய்வதாக காலி மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ஹெக்டர் தமர்சிறி உறுதியளித்ததையடுத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்து சென்றனர். (டி.ஜி. சுகதபால, சஜீவ விஜேவீர)
 


You May Also Like

  Comments - 0

  • neethan Saturday, 24 December 2011 04:51 AM

    நம்ப முடியவில்லை,இலங்கையில் பொலிஸ் அதிகாரியின் இடமாற்றத்தை ஆட்சேபித்து ஆர்ப்பாட்டம்.

    Reply : 0       0

    PUTTALA MANITHAN Sunday, 25 December 2011 09:33 AM

    நல்லது நடந்தால் உங்களுக்கு வேம்பு தான் (பிடிக்காதே )

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X