Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 28, வியாழக்கிழமை
Super User / 2011 டிசெம்பர் 22 , மு.ப. 09:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
த
தனியார் துறையோடு இணைந்து சமுத்திர பல்கலைக்கழகம் சுற்றுலாத்துறையில் ஈடுபட முன்வந்தமை நாட்டில் சிறந்த எதிர்காலத்தின் அடையாளமாகும் என இளைஞர் விவகார மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.
"வியட்நாம், சீனா, மலேசியா போன்ற நாடுகள் தனியார் துறையோடு இணைந்து செயல்படுவதன் மூலமே தற்போதைய அபிவிருத்தியை அடைந்துள்ளன. ஆகவே நமது நாட்டிலும் உள்நாட்டு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்காக தனியார்துறையோடு இணைந்து, திமிங்கில மீன்களை பார்வையிடும் ஒரு திட்டம் ஆரம்பிக்கப்பட்டமை நாட்டின் வழமான எதிர்காலத்தின் ஒரு சிறந்த அடையாளமாகும்" எனவும் அவர் கூறினார்.
இலங்கை சமுத்திர பல்கலைக்கழகத்திற்கு சொந்தமான கடற்படகுகள் டொல்பின் மீன்களை பார்வையிடும் சுற்றுலா நடவடிக்கையில் ஈடுபடுத்தும் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இலங்கை சமுத்திர பல்கலைக்கழகத்தின் ஏற்பாட்டின்படி ஆரம்பித்த இப்பயணம், காலி மீனவ துறைமுகத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்டது. இதற்காக பெந்;தோட்ட ரிச்சேட்ஸ் ருவர்ஸ் அன்ட் டிரெவல்ஸ் என்னும் தனியார் நிறுவனமும் உதவியது.
அமைச்சர் டலஸ் அழகப்பெரும அங்கு தொடர்ந்து பேசுகையில், இன்று சமுத்திர பல்கலைக்கழகம் தனது 12 ஆவது பிறந்த தினத்தை கொண்டாடுவதற்காக மிக தைரியமான முறையில் காலடியை வைத்துள்ளது.
கடல் வளங்களை கடற் பொருளாதாரத்திற்காக சேர்த்துக்கொள்ளும் நோக்கத்துடன் 12 வருடங்களுக்கு முன் நமது ஜனாதிபதி; மீன்பிடி மற்றும் நீர் வழங்கள் அபிவிருத்தி அமைச்சராக இருந்த போது, தேசிய மீன்பிடி பயிற்சி நிலையத்தை ஆரம்பித்து வைத்தார். பிறகு இன் நிறுவனத்திற்கு தேசிய சமுத்திர பல்கலைக்கழகம் என்று பெயரிடப்பட்டது.
சமுத்திர பல்கலைக்கழகத்திற்கு சொந்தமானதாக ஒரு கப்பல் மற்றும் 7 கடற் படகுகள் உள்ளன. வருடத்தின் எல்லா தினங்களும் இக் கப்பல்கள் பயிற்சி வேலைகளுக்காக பயன்படுவதில்லை. அதற்கு அமைய சமுத்திர பல்கலைக்கழகம் அரசாங்க திறைசேரிக்கு மட்டும் பாரமாக இருக்கும் நிறுவனமாக இருக்காமல், வருமானத்தை ஈட்டும் நோக்கத்துடன் இவ்வாறான திமிங்கில மற்றும் டொல்பின் மீன்களை பார்வையிடும் வேலைத்திட்டத்தை ஒரு தலைமை திட்டமாக ஆரம்பித்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
வியட்நாம், சீனா, மலேசியா போன்ற நாடுகள் தனியார் துறையோடு இணைந்து செயல்படுவதன் மூலமே தற்போதைய அபிவிருத்தியை பெற்றெடுத்துள்ளது. ஆகவே நமது நாட்டிலும் உள்நாட்டு வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்காக தனியார்துறையோடு இணைந்து திமிங்கில மீன்களை பார்வையிடும் ஒரு திட்டம் ஆரம்பிக்கப்பட்டமை நாட்டின் வளமான எதிர்காலத்தின் ஒரு சிறந்த அடையாளமாகும்.
இந்த வருடத்தின் 8 இலட்சமாவது சுற்றுலாப்பயணி இலங்கைக்கு வந்தார். சுற்றுலாத்துறை என்பது வெளிநாட்டு செலாவணியை ஈட்டெடுப்பதற்;காகவுள்ள ஒரு சிறந்த திட்டமாகும். இத் திமிங்கில மீன்கள் மற்றும் டொல்பின் மீன்களைப் பார்வையிடும் வேலைத் திட்டமும் சுற்றுலாத்துறையில் அபிவிருத்திக்காகவுள்ள ஒரு சிறந்த வழியே ஆகும் என்றும் அவர் தெரிவித்தார்.
சமுத்திர பல்கலைக்கழகத்தின் பணிப்பாளர் நாயகம் விஜய விக்கிரமரத்திவும் இந்நிகழ்வில் உரையாற்றினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
47 minute ago
1 hours ago