2024 நவம்பர் 28, வியாழக்கிழமை

கருக்கலைப்பு வைத்தியராக பணியாற்றிய சுத்திகரிப்பு ஊழியர்

Super User   / 2011 ஒக்டோபர் 16 , பி.ப. 05:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கிருஷான் ஜீவக ஜயருக்)

மாத்தறையில் கருக்கலைப்பு நிலையமொன்றை முற்றுகையிட்ட பொலிஸார், அங்கு 'பெண் டாக்டராக' பணியாற்றியவர் உண்மையில் மாத்தறை வைத்தியசாலையில் சுத்திகரிப்பு ஊழியராக பணியாற்றிய பெண் என்பதை கண்டறிந்துள்ளனர்.

மேற்படி பெண்ணும் அவரின் முகாமையாளர் ஒருவரும் பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களையும் கைப்பற்றியுள்ளனர். இம்மருந்துகளும் மருத்துவ உபகரணங்களும் மாத்தறை வைத்தியசாலையிலிருந்து எடுத்துவரப்பட்டவை என பொலிஸார் தெரிவித்தனர்.

இம்முற்றுகை இடம்பெற்ற வேளையில் பெண்கள் இருவர் தமது துணைவர்களுடன் கருக்கலைப்புக்காக அங்கு வந்திருந்தனர்.

தினமும் 10-12 கருக்கலைப்புகளை இப்பெண் மேற்கொண்டுவந்ததாகவும் பௌர்ணமி தினங்களிலும் இந்நிலையம் திறக்கப்பட்டிருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இப்பெண் கருக்கலைப்புக்கு 5000 முதல் 8000 ரூபாவரை அறவிட்டுவந்துள்ளார் எனவும் பொலிஸார் கூறுகின்றனர்.

இப்பெண் மாத்தறை வைத்தியசாலையில் கடந்த 10 வருடங்காக சுத்திகரிப்பு ஊழியராக பணியாற்றியவர் எனவும் அங்கு பெண் நோயியல் நிபுணர்கள் பணியாயற்றுவதைப் பார்த்து கருக்கலைப்பு நுட்பங்களை கற்றுக்கொண்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இப்போலி வைத்தியரும் அவரின் முகாமையாளரும் நீதிமன்றில் ஆஜபர்படுத்தப்பட்டபோது அவர்கள் இருவரையும் ஒக்டோபர் 24 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது.

அதேவேளை கருக்கலைப்பு நிலையத்திற்கு வந்திருந்த இரு தம்பதிகளையும் ஒக்டோபர் 21 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது.

கைது செய்யப்பட்ட சிலரையும் கைப்பற்றப்பட்ட உபகரணங்கள் சிலவற்றையும் படங்களில் காணலாம்.  (சண்டே டைம்ஸ்)
 


You May Also Like

  Comments - 0

  • சிறாஜ் Monday, 17 October 2011 05:10 AM

    என்ன கொடுமை சார் இது?

    Reply : 0       0

    S.Mohanarajan Monday, 17 October 2011 07:44 PM

    சிறு பிள்ளைகளின் நடத்தை முதியவர்களின் பிறழ் நடத்தை என்பனவே இதற்கு காரணம். பாடசாலைகள் கவனமாக பிள்ளைகளின் நடத்தைகளில் அக்கறை செலுத்த வேண்டும் சட்டம் மிக கடுமையாக நடைமுறை படுத்த வேண்டும்.

    Reply : 0       0

    xlntgson Monday, 17 October 2011 10:30 PM

    காதலைப் பதிவு செய்! பதிவுத் திருமணம் போல் பதிவுக் காதல்!
    பதியாமல் யாரும் காதல் புரியக்கூடாது! அந்த இணைய தளம் அரச அங்கீகாரத்துடன் வெற்றி பெரும் வாய்ப்பு உள்ளது!மோசடியை ஆரம்பத்திலேயே கண்டு பிடித்து விடலாம் அல்லவா, எப்படி எனது யோசனை? ஆனால் இரகசியங்களுக்கு நான் பொறுப்பில்லை, அப்பா! ஆளை விடுங்கள்!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X