Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 28, வியாழக்கிழமை
Super User / 2011 ஒக்டோபர் 11 , பி.ப. 05:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கிருஷான் ஜீவக ஜயருக்)
ஹம்பாந்தோட்டை கடற்கரையில் நடைபெறும் தெற்காசிய கடற்கரை விளையாட்டு விழாவையொட்டி நடைபெற்ற இசை நிகழ்ச்சியொன்றின் இறுதியில் கடற்படையினருக்கும் கிராமவாசிகளுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் ஐவர் காயமடைந்துள்ளனர்.
மோதலின்போது காயமடைந்த பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் இருவர் பாதுகாப்பு காரணங்களுக்காக மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஹம்பாந்தோட்டை மீன்பிடி துறைமுகத்தில் விசேட கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்த கடற்படையினருக்கும் கிராமவாசிகளுக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதமொன்றையடுத்து இம்மோதல் மூண்டது.
காயமடைந்த கிராமவாசிகள் இருவர் ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இம்மோதலையடுத்து நிலைமையை கட்டுப்படுத்துவதற்காக விசேட அதிரடிப்படையினர் வரழைக்கப்பட்டனர்.
மேற்படி கடற்படை உத்தியோகஸ்தர்கள் இருவரும் மதுபோதையில் இருந்ததாக மருத்துவ அறிக்கை தெரிவிக்கிறது.
இம்மோதல் சம்பவம் குறித்து சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் லலித் ஏ. ஜயசிங்கவின் நெறிப்படுத்தலின் கீழ் ஹம்பாந்தோட்டை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Nishanthan Wednesday, 12 October 2011 04:58 AM
இதுவே யாழ்ப்பாணத்தில் நடந்திருந்தால்?
Reply : 0 0
neethan Wednesday, 12 October 2011 06:14 AM
நிசாந்தன் பல நூறு மக்கள் காயமடைந்து ஆசுபத்தியில் அனுமதிக்கப்பட்டு இருப்பார்கள். மக்கள் சட்டத்தை கையிலெடுத்ததால் ஏற்பட்ட நிகழ்வு என காரணமும் சொல்லியிருப்பார்கள்.
Reply : 0 0
xlntgson Friday, 14 October 2011 08:33 PM
ஜனாதிபதி வெளிநாட்டிலா?
ஜனாதிபதி வெளிநாடு சென்றால் ஹம்பாந்தோட்டையில் எதாவது நடக்கும்!
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
56 minute ago
2 hours ago