2024 நவம்பர் 28, வியாழக்கிழமை

இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் காலி மாவட்டத்திற்கு விஜயம்

Super User   / 2011 ஒக்டோபர் 06 , பி.ப. 12:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் கிரிஸ்டின் ரொபின்கோ காலி மாவட்டத்திற்காக விஜயத்தினை நாளை வெள்ளிக்கிழமை மேற்கொள்ளவுள்ளார்.

பிரான்ஸ் நாட்டு நிறுவனமான யுரோபோர்ம்டினால் பல மில்லியன் ருபா பெறுமதியான இரண்டு உயர் ரக மருத்துவ உபகரணங்களை காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலைக்கு வழங்கவுள்ள நிகழ்வில் இலங்கை அதிகாரிகளின் அழைப்பிற்கினங்க இலங்கை;கான பிரான்ஸ் தூதுவர் கலந்துகொள்ளவுள்ளார்.

காலி மாட்ட மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் அரச அதிகாரிகளையும் இந்த விஜயத்தின் போது அவர் சந்திக்கவுள்ளார்.

பிரான்ஸ் மக்களுக்கும் காலி மாவட்டத்திற்கும் இடையிலான உறவு நீண்ட வரலாறாகும். இதனாலேயே இலங்கையில் ஏற்பட்ட சுனாமிக்கு பின்னர் பிரான்ஸ் வெளிநாட்டு அரசசார்பற்ற நிறுவனங்கள் காலி மாவட்டத்திற்கு உதவியமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, அநுராதபுரம், காலி, பொலனறுவை மற்றும் யாழ்ப்பாண வைத்தியசாலைகளில் நவீன சத்திர சிகிச்சை நிலையம் மற்றும் இருதய சிகிச்சை கருவிகள் என்பவற்றிற்காக பிரான்ஸ் அரசாங்கத்தினால் 1.6. மில்லியன் ரூபா இலகு கடன் வழங்க்ப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X