2024 நவம்பர் 28, வியாழக்கிழமை

விசாரணையின்போது நஞ்சருந்திய மாணவர்

Super User   / 2011 ஜூலை 06 , பி.ப. 04:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மாத்தறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் அலுவலகத்தில் நடைபெற்ற விசாரணையொன்றின்போது நஞ்சருந்திய ராகம மருத்துவ கல்லூரி மாணவர் ஒருவர் மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பாடசாலை மாணவி ஒருவரும் அம்மாணவியின் பெற்றோரும் கொடுத்த புகார் ஒன்று தொடர்பாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் விசாரணை நடத்திக்கொண்டிருந்தபோது இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

 அம்மாணவர் தனது பொக்கற்றில் இருந்து நஞ்சுக்குப்பியொன்றிலிருந்து நஞ்சை அருந்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அம்மாணவி மற்றும் பெற்றோரும் இவ்விசாரணையின்போது சமுகமளித்திருந்தனர்.

இதேவேளை பொலிஸ் அத்தியட்சகரின் அச்சுறுத்தல் காரணமாக தனது மகன் நஞ்சருந்தியிருக்கலாம் என மாணவரின் தந்தை தெரிவித்துள்ளர்.

எனினும் இக்குற்றச்சாட்டை  சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிராகரித்துள்ளார். அம்மாணவி, அவரின் தந்தை உட்பட பலருக்கு முகவரியிடப்பட்ட பல கடிதங்களை சமர்ப்பித்த பின்னரே மேற்படி மாணவர் நஞ்சருந்தியதாக மேற்படி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்துள்ளார். (கிரிஷான் ஜீவக ஜயருக்)
 


You May Also Like

  Comments - 0

  • xlntgson Thursday, 07 July 2011 09:12 PM

    மருந்தை ஆள வேண்டியவர் மருந்துக்கே ஆளாகி விட்டாரே!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X