2024 நவம்பர் 28, வியாழக்கிழமை

நாட்டை முன்னேற்றுவதற்காக உள்ள ஒரே வழி தொழிற்பயிற்சி, தொழில்நுட்பக் கல்வியே: அமைச்சர் டலஸ்

Super User   / 2011 மார்ச் 28 , மு.ப. 11:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

"நாட்டை முன்னேற்றுவதற்காக உள்ள ஒரே வழி தொழிற்பயிற்சி மற்றும் தொழில்நுட்பக் கல்வியே ஆகும். இந்நாட்டில் பல ஆட்சிக் காலங்கள் நிலைத்தாலும் தொழிற்பயிற்சி மற்றும் தொழில்நுட்பக் கல்வியைப் பற்றி அக்கறை செலுத்துவதில்லை. அதற்கு வேண்டிய சிந்திக்கும் புத்தி எந்தவொரு தலைவருக்கும் இருக்கவில்லை. அதைப்பற்றி அக்கறை செலுத்திய ஒரே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மாத்திரமே" என இளைஞர் விவகார மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும கூறியுள்ளார்.

மாத்தறை, பிடபத்தற மகா வித்தியாலயத்தில் அண்மையில் நடைபெற்ற 'நனசல 2011' வருடாந்த பரிசு வழங்கும் நிகழ்ச்சியில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு பேசும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

அமைச்சர் டலஸ் அழகப்பெரும தொடர்ந்து பேசுகையில்,

'வெள்ளையர் ஆட்சியின்போது, 1893 இல் மருதானை தொழில்நுட்பக் கல்லூரி ஆரம்பித்தாலும் 1996 ஆம் ஆண்டு வரை தொழில்நுட்பக் கல்வியை கிராமத்திற்கு கொண்டு செல்ல முடியாதிருந்தது. தொழிற் பயிற்சியை நாடு பூராகவும் பரவச் செய்வதற்காக நம் ஜனாதிபதி மிக தூரதிருஷ்டியுடன் செயற்பட்டார் என்றும் கூறினார்.

அந்தக் காலத்தில் கல்வி இல்லாத மக்கள் வசிக்கிறார்கள் என்று தெரிவிக்கப்பட்ட இப் பகுதியிலுள்ள பிடபத்தற மகா வித்தியாலயம், இன்று அகில இலங்கை கனினி மென்பொருள் போட்டியில் முதலாம் இடத்தைப் பெற்றுள்ளதை நாம் பாராட்டப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

கல்வி முறை மூலமான பெறுபேறுகளின் கீழ் சித்தி பெற்றவை, சித்தி பெறாதவை என்று சின்னத்தை வைத்து வெற்றியாளர்களைப் பின்னோக்கிச் சென்ற சமூகநிலை 2005 ஆம் ஆண்டில் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் மாறியது.

சித்தி பெற்றவர்கள், வெற்றி பெற்றவர்கள் என்றும,; சித்தி பெறாதவர்கள் தோல்வியாளர்கள் என்றும் இருந்து கருத்தை மாறுபட்ட சித்திபெறாதவர்களுக்குள் இருந்து தோல்வியாளர்கள் என்ற மனப்பான்மை இன்று மாறுபட்டுள்ளது.

தோல்வியடைந்த என்று பிரிக்கப்பட்ட இராணுவம் வெற்றி பெற முடியாத என்று கருதப்பட்ட யுத்தத்தில் வெற்றி பெற்றதன் மூலம் தோல்வி பெற்ற இராணுவம் என்று கருத்தை மாற்றிவிட்டது. அதனால் இந்தச் சுதந்திரம் நமக்குக் கிடைத்தது ஒரே இரவில் அல்ல.

சித்தி பெறாத மாணவர் என்று குறிப்பிட்ட குழுவைப்பற்றி தேடிப் பார்க்கும் பொறுப்பு இளைஞர் விவகார மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சுக்கும் எனக்கும் ஜனாதிபதி கொடுத்துள்ளார். அதற்காக அமைச்சர்களினதும் மற்றும் நாட்டின் மக்களின் உதவியினைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பரீட்சையில் சித்தி பெற முடியாத சிறுவர்களுக்காக தொழில்நுட்பக் கல்வி மற்றும் தொழிற்கல்வியை முன்னெடுத்துச் செல்லும் பாதை உருவாகியுள்ளது' என்றார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X