2024 நவம்பர் 28, வியாழக்கிழமை

பானுடனும் தேங்காயுடனும் மாகாண சபைக்குள் உறுப்பினர்

Kogilavani   / 2010 ஒக்டோபர் 27 , பி.ப. 02:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஏ.மன்சூர்)

தென்மாகாணசபை கூட்டம் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றப்போது ஐ.தே.க உறுப்பினர் பந்துல பண்டாரிகொட பாண் மற்றும் தேங்காய் ஒன்றை கைகளில் ஏந்திய வண்ணம் மாகாணசபைக்குள் பிரவேசித்ததால் சபையில் பரபரப்பு ஏற்பட்டது.

சபைக் கூட்டம் அவைத் தலைவர் கே.ஏ.சோமவங்ச தலைமையில் இடம்பெற்றுக்கொணடிருந்தது. ஆளுநர் குமாரிபாகசூரிய முன்வைத்த கொள்கை பிரகடனம் குறித்த விவாதம் இடம் பெற்றுக்கொண்டிருக்கையிலே மேற்படி உறுப்பினர் பானுடனும் தேங்காயுடனும் சபைக்குள் பிரவேசித்தார்.

'சபைத் தலைவர் அவர்களே நான் இவைகளை இங்குக் கொண்டுவரக் காரணம் இந்த அரசாங்கம் மக்களுக்குச் சகலதுறைகளிலும் நிவாரணம் வழங்குவதாகக் கூறிக்கொண்டும் வாழ்க்கைச் செலவை குறைப்பதாக உறுதி மொழி அளித்துக்கொண்டும் ஆட்சியை கைப்பற்றியது. மக்கள் அதனை நம்பினார்கள்.

ஆனால் தேங்காய் ஒன்று 45 ரூபாவுக்கும்,  பாண் ஒன்று 45 ரூபாவுக்குமாக மொத்தம் 90 ரூபாவாக விலையேறிவிட்டது. இந்த நிலையில் வறுமை கோட்டின் கீழ் வாழும் மக்கள் எவ்வாறு வாழமுடியும்? இதுதானா அரசு வழங்கிய நிவாரணம், இப்படித்தானா வாழக்கைச் செலவை குறைப்பது?

ஐ.தே.க. ஆட்சியின் போது பான் ஒன்று 3 ரூபா 50 சதம், தேங்காய் ஒன்று 10 அல்லது 15 ரூபா தான் என அவர் கூறினார்.
.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X