2025 ஏப்ரல் 18, வெள்ளிக்கிழமை

ஆசிரியர் தாக்கியதால் மாணவன் படுகாயம்

Kogilavani   / 2010 ஒக்டோபர் 23 , மு.ப. 06:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஏ.மன்சூர்)

தெனியாய மத்திய கல்லூரியைச் சேர்ந்த 14 வயது மாணவன் ஒருவர் ஆசிரியரால் தாக்கப்பட்டு காயமடைந்த நிலையில் தெனியாய வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வருகின்றார்.

தாக்குதலை மேற்கொண்ட ஆசிரியர் மீது பொலிஸார் விசாணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேற்படி ஆசிரியர் குறித்த மாணவன் சிறிய தவறொன்றை மேற்கொண்டதற்காக அறையொன்றினுள் மூன்றரை மணித்தியாலங்கள் வைத்து அடித்து துன்புறுத்தியதாக பொலிஸில் புகாரிடப்பட்டுள்ளது.

இதனால் மாணவனின் காது, தலை, வயிறு போன்ற பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் , உடலிலும் காயங்கள் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X